ஊழலை எதிர்ப்பதற்கு முன்பு நீங்கள் நெஞ்சை தொட்டு சொல்லுங்கள். லஞ்சம் வாங்கியதும் இல்லை. கொடுத்ததும் இல்லை. வெறும் உண்ணாநோன்புகளால் லஞ்சத்தை ஒழித்து விட முடியும் என்றோ ஒரே நாளில் இதற்கு ஒரு தீர்வு கிடைத்து விடும் என்றோ நினைத்து கூட பார்க்க முடியவில்லை. பிறகு என்ன தான் செய்வது? ஊழலை ஒழிக்க ஊழல் எப்படி நடக்கிறது என்று பார்ப்போமா?
எல்.கே.ஜி வகுப்பிற்கு தன குழந்தைக்கு கண்டிப்பாக இதே பள்ளியில் இடம் கிடைத்தாக வேண்டும் என்கின்ற பெற்றோரின் எண்ணமே முதல் இடமாக ஊழல் பிறப்பதற்கு அமைகிறது. எவ்வளவு வேண்டுமானாலும் காசு கொடுத்து இடம் வாங்கி விட முனைப்பு காண்பிப்பதால் பள்ளிகள் கட்டணத்தை உயர்த்துகின்றன. தனியறையில் பேரம் பேசுகின்றன. உங்கள் குழந்தையை பள்ளியில் சேர்க்க காசு கொடுத்தவரா நீங்கள்.... அப்படியென்றால் உங்களை ஏன் தண்டிக்க கூடாது? நீங்களும் குற்றவாளிதானே?
No comments:
Post a Comment