எங்கேயும் எப்போதும் படம் பார்த்தேன். நீண்ட நாட்களுக்குப் பின்பு நல்லதொரு படம் பார்த்த திருப்தி. வாழ்க்கையில் நாம் காணும் சின்ன சின்ன உணர்வுகளைக் கூட பதிவு செய்திருப்பது நன்றாயிருந்தது. ஒரு பெரிய ஹீரோ வந்து ஒபெனிங் சாங் குடுக்காமல், புதுமுகங்களை நம்பி படம் எடுத்திருப்பது கதைக்கு வலுவூட்டுகிறது.
வெட்டியான பாட்டுக்கள் இல்லை. அதற்காக வெளிநாடு சென்று
தயாரிப்பளருக்கு செலவு வைக்கவும் இல்லை. இந்த மாதிரி படங்களை நடிப்பே தெரியாத விஜயும், அஜீத்தும் பார்த்தாவது திருந்துவார்களா? சினிமாவிற்கு என்றுமே கதைதான் ஹீரோ. எந்த ஹீரோவிற்காகவும் கதைகள் இல்லை. அதை மக்கள் ரசிப்பதும் இல்லை.
ஒரு பொழுதுபோக்கு படத்திலும் கூட சிலரால் மட்டுமே மெசேஜ் சொல்ல முடியும். பல கோடி படம் போட்டு படம் எடுக்கும் ஷங்கரின் என்திரனில் ஒரு புண்ணாக்கு மெசேஜும் இல்லை.
ஜப்பானில் சுனாமி வந்து ஒரு லச்சத்தி ஐம்பதனாயிரம் பேர் இறந்து போனார்கள். உலகம் முழுவதும் அதற்காக கண்ணீர் வடித்தார்கள். இந்தியாவில் ஒரு வருடத்திற்கு சாதாரணமாக
2 லட்சம் பேர்கள் சாலை விபத்தில் மரணமடைகிறார்கள். இதற்காக இந்திய அரசு குறைந்தபட்சம் ஒரு 6 மாதத்திற்கு ஒருதடவையாவது சாலை விழிப்புணர்வு முகாம் நடத்தாதது கண்டிக்கத்தக்கது. இந்தியாவில் சாலைகளே இல்லை. அது வேறு விஷயம். ஆனால் ஓட்டுனர் உரிமம் கொடுக்கப்படும் முறை கேலிக்கூத்தானது. லஞ்சத்தால் கொடுக்கப் படுவதால் முறையாகப் பயிற்சி எடுக்காதவர்கள் சாலையில் சென்று பிறருக்கும் விபத்தை ஏற்படுத்தி விடுகிறார்கள். ஓட்டுனர் உரிமம் கொடுப்பதில் கடுமையான சட்டம் பின்பற்ற வேண்டும்.
6 மாதம் ஒருமுறை முகாம் பயிற்சிகளில் கட்டாயம் கலந்து கொள்ளவைக்க வேண்டும். இந்திய சாலைகளில் அதுவும் bye pass சாலைகளில் செல்பவர்களுக்கு நிச்சயம் உயிர் உத்திரவாதம் கிடையாது. இதை ஒரு மெசேஜாக ஒரு படம் எடுத்திருப்பது மிக மிக அவசியமான ஒன்று. புளிமயமரமாகப் போய் லாரியை தலைகீழாக நிறுத்துகிறவர்களுக்கும் குடும்பம் என்று ஒன்று இருக்கிறது.
திருந்த செய்யுமா எங்கேயும் எப்போதும்?