வட இந்தியாவிலிருந்து வேலைக்காக தமிழகம் வந்து குவிகிறது இளைஞர் கூட்டம். இங்கே வேலை தேடி வருபவர்கள் பெரும்பாலும் கல்யாணமாகாத பிரமச்சாரி இளைஞர்கள்தாம். அவர்கள் தமிழக பெண்கள் மேல் பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவது அதிகமாகி வருகிறது. குறிப்பாக சிறுமிகள் மீது பாலியல் வன்முறைகள் பெருகி வருகிறது. இது செய்தியாக தினந்தோறும் நாளேடுகளில் வந்துகொண்டேதான் இருக்கிறது.
கோவை மற்றும் சுற்று வட்டாரங்களில் மட்டும் சுமார் 5 லட்சம் வட இந்திய வாலிபர்கள் குடியேறி இருக்கிறார்கள். இவர்களில் சிலர் தாங்கள் வசித்த வட இந்திய பகுதிகளில் குற்றம் செய்துவிட்டு தலைமறைவாக இங்கே தஞ்சம் புகுந்தவர்களும் அடக்கம். அது சம்பந்தமாக கைது நடவடிக்கைகளும் அவ்வப்போது அரங்கேறியும் வருகிறது. இவர்களை பற்றிய ஒரு (data base) முழு தகவல் காவல் துறையிடம் இருப்பது நல்லது. ஆனால் அது சம்பந்தமாக எந்த ஒரு நடவடிக்கையும் காவல் துறை எடுத்ததாகத் தெரியவில்லை.

வாடகைக்கு வீடு தருவோரும் போதிய தகவல் பெறாமலேயே வட இந்தியர்களை குடியமர்த்துகின்றனர். இது சம்பந்தமான விழிப்புணர்வு அனைவருக்கும் அவசியம். நல்லவர்களோ, கெட்டவர்களோ யாராக இருந்தாலும் தாங்கள் நடத்தும் நிறுவனங்கள், குடியிருக்கும் பகுதிகள், வீடு வாடகைக்கு விடுவோர் தாமாக ஆர்வமெடுத்து அவர்களை பற்றிய முழு விபரங்களை சேகரித்து அருகில் உள்ள காவல் நிலையங்களில் சமர்ப்பிப்பது நல்லது. அதை காவல் துறையும் வரவேற்கிறது. குற்றங்கள் குறையவும், குற்றவாளிகளை உடனே கைது செய்யவும் இந்த தகவல்கள் நிச்சயம் உதவும். வந்த பின்பு வருத்த படுவதைவிட வருமுன் காப்பதே சிறந்தது.