இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏராளமானோர் சென்று வருகிறார்கள். கல்வி கற்க, வேலை வாய்ப்பிற்காக, சுற்றுலா, பொழுது போக்கு, மருத்துவ சிகிச்சை என காரணங்கள் ஆயிரம் பல. சென்றவர்கள் வியந்து பேசுகிறார்கள். வழுக்கும் சாலைகள் . வானளாவிய கட்டிடங்கள். நேர்த்தியான மக்கள்.
எல்லாம் சரி ! இங்கே என்ன பணமா இல்லை. ஒரு தாய்லாந்து, பிலிப்பைன்சை விடவா நம்மிடம் பணம் இல்லாமல் போய் விட்டது. நமது அரசாங்கம் அமெரிக்கா அளவிற்கு சம்பாதிக்கிறது. லில்லிபுட் (ரொட்டித்துண்டு) அளவிற்கே நலத் திட்டங்களுக்கு செலவிடுகிறது.
நம்ம ஊர் சினிமாக்காரர்கள் மட்டும் இல்லையென்றால் நமக்கு அமெரிக்காவையும் தெரியாது. மச்சு பிட்சுவையும் தெரியாது. வெளி நாட்டில் கனவு பாடல்கள் வைத்து நம்மை எல்லாம் அங்கே சுற்றி காமிக்கிறார்கள்.
வாழ்க தமிழ் சினிமா! வெல்க தமிழ் சினிமா!
நமது நாடும் ஏன் பிற நாடுகள் மாதிரி அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கிறது. மக்கள் தொகை ஒரு பிரச்சனை. எல்லா மக்களுக்கும் எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து விட முடியாது என்று அரசு சொல்லுமானால்! சீனா நம்மை விட மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடு. அதனால் மட்டும் எப்படி சாத்தியமாயிற்று. ஒரு ஒலிம்பிக்கைக் கூட நடத்தி முடித்து அந்த நகரத்தையே மக்களுக்கு சுற்றுலாத் தலமாக்கி அர்ப்பணித்திருகின்றது. அதுவல்லவா நாடு! அதுவல்லவோ அரசாங்கம்!
நம்மூரில் இன்னமும் காமன் வெல்த் போட்டி முடிந்தும் கூட முறைகேடுகள் பற்றிய பேச்சுக்களும், சலசலப்பும் முடிந்த பாடில்லை. இது முழுக்க முழுக்க அரசின் தவறே. ஒரு விளையாட்டுப் போட்டியை கூட ஒழுங்காக நடத்தத் தெரியாத அரசு எப்படி ஒழுங்காகஆட்சி செய்யும். மக்களுக்குத்
தேவையானதை எப்படிசெய்து தரும்? தராதவர்களை என்ன செய்யலாம்? தரக்கூடியவர்கள் யார்? கொஞ்சம் கண்டு பிடித்து கொண்டுங்க சார்!.