கடந்த வாரம் 4ம் தேதி கேரளா பயணம் சென்றிருந்தேன். குறுகிய சாலைகள், பழுது பார்க்கப்படாத சில சாலைகளில் பயண நேரம் அதிகமாக இருந்தது. முன்தினம் பெய்திருந்த மழையில் எல்லா ஆறுகளும் நிரம்பி வழிந்தது பார்க்கப் பொறாமையாக இருந்தது. இந்த ஆறுகளையெல்லாம் தமிழ்நாட்டிற்கு திருப்பி விட்டால் எவ்வளவு வளமையாக இருப்பார்கள் நம் தமிழக விவசாயிகள் என்று மனது ஒரு கணக்கில் குதூகலித்தது.
குருவாயூர் கோவிலில் 3 மணிநேரம் நீண்ட வரிசையில் சுமார் 5000பொது மக்களுடன் காத்திருந்தேன். ஒருத்தர்கூட சலிப்புக் காட்டாமல் மௌனமாக ஆண்டவனை பிரார்த்தித்தபடி காத்திருந்த அந்த பண்பு என்னை வியக்க வைத்தது. ஆண்கள் கட்டாயமாக சட்டையை கழட்டி வெற்றுடம்புடன் இருந்தனர். கோயில் வளாகத்தில் ஒரு குப்பையைக் காண முடியவில்லை. கோயில் வாசல் மற்றும் சுற்றுப்புறத்தில் பிச்சைக்காரர் தொந்திரவு இல்லை. வரிசையில் நின்றிருக்கும்போது யாரும் செல்போன் பேசவில்லை. கோவில் நடைபாதையில் இருந்த கடை வியாபாரிகள் யாரும் கூவி விற்கவில்லை. உள்ளே அழைக்கவில்லை. வியாபார தொந்திரவு செய்யவில்லை.
வழியில் ஒரு ஹோட்டலில் மதிய உணவு அருந்தினோம். கொட்டை அரிசி என்றாலும் வெரைட்டி அதிகமாக இருந்தது. நல்ல உணவு 60ரூபாய்தான் வாங்கினார்கள். இதுவே கோவையில் இருந்திருந்தால் 100 ரூபாய் வாங்கியிருப்பார்கள். என்னை வியக்க வைத்தது இந்த கேரளாப் பயணம்.
கோழிக்கோடு வரை சென்றதில் நான் கண்டது
••••சாலையோரக் குடிசைகள், ஆக்கிரமப்புக்கள் அறவே கிடையாது
•••• பிளக்ஸ் கலாச்சாரம் இல்லவே இல்லை
•••• பிளாஸ்டிக் குப்பைகள் எங்கும் இல்லை நல்ல விழிப்புணர்வு மக்களிடம்
••••வீட்டுக்கு வீடு நெரிசலில்லாமல் போதுமான இடைவெளி இருந்தது
•••• அப்பார்ட்மெண்ட் கொடுமை இங்கு இல்லை
•••• பலாமரம் வீட்டுக்கு வீடு இருந்தது
•••• ஊர் முழுவதும் பச்சைத் துணியினால் போர்த்தியது போல இருந்தது
•••• கோவில்களில் அன்பளிப்பு உபயம் என்று எவர் பெயரும் பொரித்த உபயப் பொருட்கள் காணப்படவில்லை.
நண்பனின் கமெண்ட் காதில் விழுந்தது. ரூல்ஸ் ராமானுஜம் ஊருங்கோவ்
சாதுர்யன்
எண்ணங்களும், பகிர்வுகளும்
Sunday 7 July 2013
Tuesday 24 January 2012
திருவள்ளுவரும் விமர்சனதிற்குட்பட்டவரே.
தமிழர்களின் புனித நூலான திருக்குறளை எத்தனையோ பேர் படித்திருப்பர்.
இங்கே நாம் திருக்குறளை புனித நூல் என்று கூறக் காரணம் தமிழ்ச் சான்றோர் அடிக்கடி மேற்கோள் காட்டிப் பேசுவது திருக்குறளைத் தான். அதில் எத்தனையோ நல்ல விஷயங்கள் கூறப் பட்டிருக்கின்றது முற்றிலும் உண்மையே.
எத்தனையோ முறை படித்திருக்கிறேன்....படித்திருக்கிறோம். இம்முறை படித்த போது எழுந்த உறுத்தலே இந்த கேள்வியை எழுதத் தூண்டியது.
கயமை அதிகாரம் 108 இல் 1075 வது குறள்
அச்சமே கீழ்கள தாசார மெச்ச
மவாவுண்டே லுண்டாஞ் சிறிது.
விளக்கம்: கீழ் மக்களின் ஒழுக்கத்திற்குக் காரணம் அச்சமே. அதைவிட ஆசையினாலும் சிறிதளவு ஒழுக்கம் உண்டாகும்.
கீழ் மக்கள் என்று வள்ளுவர் யாரை இங்கே வியம்புகிறார்? தொழிலை வைத்தா? சாதியை வைத்தா? பொருளை வைத்தா? அறிவை வைத்தா?
ஒரு வேளை அவர் வாழ்ந்த காலத்தில் சாதியின் தாக்கம் அதிகம் இருந்திருக்குமேயானால் கீழ் சாதியில் பிறந்த ஒருவன் ஒழுக்கத்துடன் வாழ நினைத்திருந்தால் அது எப்படி ஆசையாக இருந்திருக்க முடியும்?
ஒழுக்கம் என்பது மேல்வர்க்கத்திற்கு மட்டுமே உரித்தானதா என்ன?
கீழ் சாதிக்காரன் எல்லோருமே ஒழுக்கக் கேடானவர்களா?
இதிலிருந்தே தெரியவில்லையா? அன்றைய கால கட்டத்தில் வள்ளுவரும் சாதீயம் பார்த்திருக்கிறார். சாதீயம் பார்த்த ஒருவரின் எழுத்துக்களை திராவிட கட்சிகள் கூட மேற்கோள் காட்டிப் பேசுவது விந்தைக்குரியது தானே. ஒருவேளை திராவிடக் கட்சிக்காரர்கள் திருக்குறளை முழுமையாகப் படிக்க வில்லையா?
ஒழுக்கத்திற்கும் அச்சத்திற்கும் என்ன சம்பந்தம்? ஒருவன் மது அருந்தாமல் அல்லது ஒழுக்கக் கேடாக இல்லாமல் இருந்தால் அது அவன் உடம்பிற்கும் நல்லது. அவனை நம்பியிருக்கும் குடும்பத்திற்கும் நல்லது. மது அருந்தாமை அவனுக்குள்ள விழிப்புணர்வே அன்றி அச்சத்தினால் அல்ல? இது எப்படி திருவள்ளுவரின் பார்வையில் அச்சமானது? ஆசையானது? ஒருவேளை நான் புரிந்துகொண்டது தவறோ?
Thursday 5 January 2012
Tuesday 20 December 2011
இந்தமுல்லைப் பெரியாறு பட்டாசு வெடிக்குமா!!!!..இதிலாவது தமிழினம் ஒன்று சேருமா ??
பற்றி எரிந்து கொண்டிருக்கின்றது தமிழகம். முல்லைப் பெரியாறு தண்ணீர் தென் தமிழக மக்களின் வாழ்வாதாரம். இருக்கின்ற அத்தனை பிரம்மாஸ்திரத்தையும் ஏவிக் கொண்டிருக்கிறது கேரளா. இங்கே விஜய் டிவி ரஜினி பிறந்தநாளை ஆரவாரமாய்க் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.
ஒரு மிகச் சிறந்த சினிமா வியாபாரியான ரஜினி தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர். தன் படம் வெளியாகும் சில நாட்களுக்கு முன்பு மட்டும் தான் அவருக்குத் தமிழக மக்களும், ரசிகர்களும் ஞாபகத்திற்கு வருவார்கள். ஏதாவது ஒரு பாடல் வெளியீட்டு விழாவில் தமிழர்களை உசுப் பேற்றும்படியான தன் வழக்கமான வியாபார உத்தியை வார்த்தை சித்து விளையாட்டில் காண்பிப்பார். இந்த விளம்பரம் அவருக்குப் போதுமானது. ஒட்டு மொத்த தமிழகமும் அவர் நடித்து வெளி வரும் படத்தை வெள்ளி விழா படமாக்கி விடும். ஒவ்வொரு முறையும் இதுதான் நடந்து கொண்டிருக்கின்றது.
தமிழர்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் இவர் மௌன விரதம் மட்டுமே இருப்பார். அல்லது தமிழகத்தில் இல்லாமல் இமயமலையில் இருப்பார். தமிழர்கள் ஒரு அரசியல் அனாதைகள். காப்பாற்ற ஒருவரும் இல்லை.
எந்த தேவலோக இளவரசனும் நம்மைக் காப்பாற்ற வரமாட்டான். விழித்தெழு தோழா...விழித்தெழு.....
தமிழர்களே!! தமிழர்களே!!!...நம்மைச் சுற்றித்தான் எத்தனை எத்தனை அரசியல்கள். நம்மை திசை திருப்பும் முயற்சியில் ஆயிரம் ஆயிரம் காரணிகள். இனியாவது விழித்துக் கொள்வோம்....நாயர் கடை டீ குடிக்க மாட்டேன் என்று சத்தியப் பிரமாணம் எடு. வியாபாரம் இழந்த தமிழக கேரளா மக்கள் தாமாக முன் வந்து சண்டித்தனம் செய்யும் சண்டியிடமும், அச்சுதானந்திடமும் தண்ணீர் விட அப்பவாவது சொல்லுவார்களா? .......
தமிழா உன் பணம் மட்டுமே வந்தேறிகளுக்கு வேண்டும்....அவர்களின் பணப் பையை நிரப்ப உன் மறதி ஒன்றே போதுமே !!!!
இந்தமுல்லைப் பெரியாறு பட்டாசு வெடிக்குமா!!!!..இதிலாவது தமிழினம் ஒன்று சேருமா ??
ஒரு மிகச் சிறந்த சினிமா வியாபாரியான ரஜினி தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர். தன் படம் வெளியாகும் சில நாட்களுக்கு முன்பு மட்டும் தான் அவருக்குத் தமிழக மக்களும், ரசிகர்களும் ஞாபகத்திற்கு வருவார்கள். ஏதாவது ஒரு பாடல் வெளியீட்டு விழாவில் தமிழர்களை உசுப் பேற்றும்படியான தன் வழக்கமான வியாபார உத்தியை வார்த்தை சித்து விளையாட்டில் காண்பிப்பார். இந்த விளம்பரம் அவருக்குப் போதுமானது. ஒட்டு மொத்த தமிழகமும் அவர் நடித்து வெளி வரும் படத்தை வெள்ளி விழா படமாக்கி விடும். ஒவ்வொரு முறையும் இதுதான் நடந்து கொண்டிருக்கின்றது.
தமிழர்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் இவர் மௌன விரதம் மட்டுமே இருப்பார். அல்லது தமிழகத்தில் இல்லாமல் இமயமலையில் இருப்பார். தமிழர்கள் ஒரு அரசியல் அனாதைகள். காப்பாற்ற ஒருவரும் இல்லை.
எந்த தேவலோக இளவரசனும் நம்மைக் காப்பாற்ற வரமாட்டான். விழித்தெழு தோழா...விழித்தெழு.....
தமிழர்களே!! தமிழர்களே!!!...நம்மைச் சுற்றித்தான் எத்தனை எத்தனை அரசியல்கள். நம்மை திசை திருப்பும் முயற்சியில் ஆயிரம் ஆயிரம் காரணிகள். இனியாவது விழித்துக் கொள்வோம்....நாயர் கடை டீ குடிக்க மாட்டேன் என்று சத்தியப் பிரமாணம் எடு. வியாபாரம் இழந்த தமிழக கேரளா மக்கள் தாமாக முன் வந்து சண்டித்தனம் செய்யும் சண்டியிடமும், அச்சுதானந்திடமும் தண்ணீர் விட அப்பவாவது சொல்லுவார்களா? .......
தமிழா உன் பணம் மட்டுமே வந்தேறிகளுக்கு வேண்டும்....அவர்களின் பணப் பையை நிரப்ப உன் மறதி ஒன்றே போதுமே !!!!
இந்தமுல்லைப் பெரியாறு பட்டாசு வெடிக்குமா!!!!..இதிலாவது தமிழினம் ஒன்று சேருமா ??
Tuesday 25 October 2011
மெதுவாப் போங்க சார்!
எங்கேயும் எப்போதும் படம் பார்த்தேன். நீண்ட நாட்களுக்குப் பின்பு நல்லதொரு படம் பார்த்த திருப்தி. வாழ்க்கையில் நாம் காணும் சின்ன சின்ன உணர்வுகளைக் கூட பதிவு செய்திருப்பது நன்றாயிருந்தது. ஒரு பெரிய ஹீரோ வந்து ஒபெனிங் சாங் குடுக்காமல், புதுமுகங்களை நம்பி படம் எடுத்திருப்பது கதைக்கு வலுவூட்டுகிறது.
வெட்டியான பாட்டுக்கள் இல்லை. அதற்காக வெளிநாடு சென்று
தயாரிப்பளருக்கு செலவு வைக்கவும் இல்லை. இந்த மாதிரி படங்களை நடிப்பே தெரியாத விஜயும், அஜீத்தும் பார்த்தாவது திருந்துவார்களா? சினிமாவிற்கு என்றுமே கதைதான் ஹீரோ. எந்த ஹீரோவிற்காகவும் கதைகள் இல்லை. அதை மக்கள் ரசிப்பதும் இல்லை.
ஒரு பொழுதுபோக்கு படத்திலும் கூட சிலரால் மட்டுமே மெசேஜ் சொல்ல முடியும். பல கோடி படம் போட்டு படம் எடுக்கும் ஷங்கரின் என்திரனில் ஒரு புண்ணாக்கு மெசேஜும் இல்லை.
ஜப்பானில் சுனாமி வந்து ஒரு லச்சத்தி ஐம்பதனாயிரம் பேர் இறந்து போனார்கள். உலகம் முழுவதும் அதற்காக கண்ணீர் வடித்தார்கள். இந்தியாவில் ஒரு வருடத்திற்கு சாதாரணமாக
2 லட்சம் பேர்கள் சாலை விபத்தில் மரணமடைகிறார்கள். இதற்காக இந்திய அரசு குறைந்தபட்சம் ஒரு 6 மாதத்திற்கு ஒருதடவையாவது சாலை விழிப்புணர்வு முகாம் நடத்தாதது கண்டிக்கத்தக்கது. இந்தியாவில் சாலைகளே இல்லை. அது வேறு விஷயம். ஆனால் ஓட்டுனர் உரிமம் கொடுக்கப்படும் முறை கேலிக்கூத்தானது. லஞ்சத்தால் கொடுக்கப் படுவதால் முறையாகப் பயிற்சி எடுக்காதவர்கள் சாலையில் சென்று பிறருக்கும் விபத்தை ஏற்படுத்தி விடுகிறார்கள். ஓட்டுனர் உரிமம் கொடுப்பதில் கடுமையான சட்டம் பின்பற்ற வேண்டும்.
6 மாதம் ஒருமுறை முகாம் பயிற்சிகளில் கட்டாயம் கலந்து கொள்ளவைக்க வேண்டும். இந்திய சாலைகளில் அதுவும் bye pass சாலைகளில் செல்பவர்களுக்கு நிச்சயம் உயிர் உத்திரவாதம் கிடையாது. இதை ஒரு மெசேஜாக ஒரு படம் எடுத்திருப்பது மிக மிக அவசியமான ஒன்று. புளிமயமரமாகப் போய் லாரியை தலைகீழாக நிறுத்துகிறவர்களுக்கும் குடும்பம் என்று ஒன்று இருக்கிறது.
திருந்த செய்யுமா எங்கேயும் எப்போதும்?
Wednesday 21 September 2011
உண்ணாவிரத மேனியாக்களும் ஊடகங்களின் ராஜதந்திரங்களும்!
ஒவ்வொருத்தரும் வீட்டில் கோபித்துக்கொண்டோ , உணவில்லாமலோ இருந்தால் சாப்பிடாமல் தான் இருப்பார்கள். இன்னும் சிலபேர் வீட்டில் உணவிருந்தும் உணவகங்களில் சாப்பிடுவதையே விரும்புவர். சில உணவங்காடிகளின் ருசி வீட்டில் சாப்பிடுவதையே தவிர்க்க வைக்கும், சுண்டி இழுக்கும். ஆனால் இன்று இந்தியாவில் உண்ணா விரதம் என்கின்ற பெயரில் அரசியல்வாதிகள் செய்யும் அட்டகாசத்திற்கு அளவே இல்லாமல் போய் விட்டது.
வயிறு நிரம்ப சாப்பிட்டவன் அதை சரிக்கட்டவும், நோயாளிகளுக்கு நோய் விரைவில் குணமாகவும் நம் முன்னோர்களால் கண்டறியப்பட்டு பின் அதை ஆன்மிகம் தத்தெடுத்துக் கொண்ட வழியே உண்ணாவிரதம். தனி ஒருவன் நன்மைக்காக மனிதன் கண்டு பிடித்த வழி இன்று சுய தம்பட்டம் அடிக்க மட்டுமே பயன்படுத்தப் படுகிறது.
அண்மையில் உண்ணா விரதத்தினால் அண்ணா ஹசாரேவும், பாபா ராம் தேவும் இந்தியாவின் பட்டி தொட்டியெங்கும் விளம்பரப் படுத்தப்பட்டார்கள்.
குஜராத் என்ற மாநில அளவில் முதல்வராக இருக்கும் மோடி என்கின்ற தனி மனிதர் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவிற்கு அடுத்த பிரதமராகும் வாய்ப்பு இருப்பது ஊடகங்களின் வாயிலாக மிகைப்படுத்தப் படுகிறது. சமயம் பார்த்துக் காத்திருந்த மோடியும் இந்த வாய்ப்பை சும்மா விடுவாரா? அவரும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துவதில் தீவிரம் காட்டுகிறார்.
3 நாள் விரதக் கூத்து நடந்து முடிந்தாயிற்று. உலக சமாதானத்திற்காக இந்த விரதமாம்!
மோடி நினைத்தது நடந்தது. விளம்பரமும் செய்தாயிற்று. அடுத்த பிரதமருக்கான விளம்பரம் மக்களை நன்றாகவே சென்றடைந்தது.
நிர்வாகத்திறமை மிக்கவர் என்று சொல்லப் படுபவர் உண்ணா விரதம் இருந்துதான் தன் பெயரை விளம்பரப் படுத்திக் கொள்ளவேண்டுமா?
ஊடகங்கள் மட்டும் விளம்பரம் செய்யாமல் இருந்திருந்தால் கடைக்கோடி இந்தியனிற்கும் இது தெரிய வருமா? வட இந்தியன் உண்ணா விரதம் இருந்தால் ஊடகத்தில் விளம்பரம். தென்னிந்தியன் இருந்தால் கண்டுகொள்ளாமல் சாக வைப்பது. இது வட இந்தியர்களுக்கு சகஜமான ஒன்று.
வட இந்தியர்கள் மட்டுமே ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆளத் துடிக்கிறார்கள். காலம் காலமாக இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. தென்னிந்தியாக்கள் வரி வசூல் செய்யப்படும் சுங்கச்சாவடிகளா என்ன?
இந்தியாவின் ஒட்டு மொத்த வரியில் முக்கால்வாசி வருமானத்தை ஈட்டிக் கொடுப்பது தென்னிந்தியர்கள்தாம். வட இந்தியனை முதலில் ரயிலில் பயணம் செய்யும்போது பயணச்சீட்டு வாங்கச் சொல்லுங்கள்! பிறகு நாட்டை ஆளுவதைப் பற்றி யோசிக்கலாம். !!!
வட இந்தியர்கள் மட்டுமே ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆளத் துடிக்கிறார்கள். காலம் காலமாக இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. தென்னிந்தியாக்கள் வரி வசூல் செய்யப்படும் சுங்கச்சாவடிகளா என்ன?
இந்தியாவின் ஒட்டு மொத்த வரியில் முக்கால்வாசி வருமானத்தை ஈட்டிக் கொடுப்பது தென்னிந்தியர்கள்தாம். வட இந்தியனை முதலில் ரயிலில் பயணம் செய்யும்போது பயணச்சீட்டு வாங்கச் சொல்லுங்கள்! பிறகு நாட்டை ஆளுவதைப் பற்றி யோசிக்கலாம். !!!
Saturday 20 August 2011
கொஞ்சம் கண்டு பிடித்து கொண்டுங்க சார்!
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏராளமானோர் சென்று வருகிறார்கள். கல்வி கற்க, வேலை வாய்ப்பிற்காக, சுற்றுலா, பொழுது போக்கு, மருத்துவ சிகிச்சை என காரணங்கள் ஆயிரம் பல. சென்றவர்கள் வியந்து பேசுகிறார்கள். வழுக்கும் சாலைகள் . வானளாவிய கட்டிடங்கள். நேர்த்தியான மக்கள்.
எல்லாம் சரி ! இங்கே என்ன பணமா இல்லை. ஒரு தாய்லாந்து, பிலிப்பைன்சை விடவா நம்மிடம் பணம் இல்லாமல் போய் விட்டது. நமது அரசாங்கம் அமெரிக்கா அளவிற்கு சம்பாதிக்கிறது. லில்லிபுட் (ரொட்டித்துண்டு) அளவிற்கே நலத் திட்டங்களுக்கு செலவிடுகிறது.
நம்ம ஊர் சினிமாக்காரர்கள் மட்டும் இல்லையென்றால் நமக்கு அமெரிக்காவையும் தெரியாது. மச்சு பிட்சுவையும் தெரியாது. வெளி நாட்டில் கனவு பாடல்கள் வைத்து நம்மை எல்லாம் அங்கே சுற்றி காமிக்கிறார்கள்.
வாழ்க தமிழ் சினிமா! வெல்க தமிழ் சினிமா!
நமது நாடும் ஏன் பிற நாடுகள் மாதிரி அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கிறது. மக்கள் தொகை ஒரு பிரச்சனை. எல்லா மக்களுக்கும் எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து விட முடியாது என்று அரசு சொல்லுமானால்! சீனா நம்மை விட மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடு. அதனால் மட்டும் எப்படி சாத்தியமாயிற்று. ஒரு ஒலிம்பிக்கைக் கூட நடத்தி முடித்து அந்த நகரத்தையே மக்களுக்கு சுற்றுலாத் தலமாக்கி அர்ப்பணித்திருகின்றது. அதுவல்லவா நாடு! அதுவல்லவோ அரசாங்கம்!
நம்மூரில் இன்னமும் காமன் வெல்த் போட்டி முடிந்தும் கூட முறைகேடுகள் பற்றிய பேச்சுக்களும், சலசலப்பும் முடிந்த பாடில்லை. இது முழுக்க முழுக்க அரசின் தவறே. ஒரு விளையாட்டுப் போட்டியை கூட ஒழுங்காக நடத்தத் தெரியாத அரசு எப்படி ஒழுங்காகஆட்சி செய்யும். மக்களுக்குத்
தேவையானதை எப்படிசெய்து தரும்? தராதவர்களை என்ன செய்யலாம்? தரக்கூடியவர்கள் யார்? கொஞ்சம் கண்டு பிடித்து கொண்டுங்க சார்!.
Subscribe to:
Posts (Atom)