அரசாங்கத்தையே குறை சொல்லிகொண்டிருக்கும் மக்கள் தங்களை சுய பரிசோதனை செய்து குறைகளை களைந்து கொள்வது எப்போது? ஊழலை எதிர்க்கும் மக்கள் லஞ்சம் கொடுக்காமல் அல்லவா இருக்க வேண்டும்? தன் மகன், மகள் என்ஜினீயர் அல்லது மருத்துவர் ஆகிவிட எவ்வளவு வேண்டுமானாலும் லஞ்சம் தர தயாராக இருக்கிறார்கள். தருவதால் தானே தனியார் கல்லூரிகளில் கூட்டம் அலை மோதுகிறது. இந்த சுயநல போக்கினால் இவர்கள் மட்டுமல்ல இவர்கள் வளர்த்தும் மகன்,மகள்கள் என்ஜினீயர் அல்லது மருத்துவர் ஆனபின்பு மக்களிடம் பணம் பறிக்கும் வியாபாரிகளாகவே மாறி விடுகிறார்கள். சேவை துறைகள் வியாபாரம் ஆகும் போது உயிர்களின் மதிப்பு துச்சம் தானே. இப்போது சொல்லுங்கள் யார் திருந்த வேண்டும்? அரசாங்கமா? மக்களா?
No comments:
Post a Comment