இந்திய மக்கள் தொகையைப் பற்றி யாராவது கவலைப் படுகிறார்களா என்றால் யாரும் இல்லை என்று ஆணித்தரமாக சொல்லலாம். ஏழை, சாதாரண நடுத்தர வர்க்கம், மேல் தட்டு மக்கள் என்று யாவருக்குமே அக்கறை இல்லாமல் தான் சென்று கொண்டு இருக்கிறது நிலைமை.
மக்களிடம் இருந்து கோடிக்கணக்கில் வரியை பிடுங்கும் அரசாங்கமோ மக்கள் தொகை அதிகரித்தால் இன்னும் அதிகமாக வரியைப் பிடுங்கலாம் என்ற உயரிய எண்ணத்தில் உறுதியாக இருக்கின்றது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த அரசிடம் எந்த ஒரு உருப்படியான திட்டமும் இல்லை.
மக்கள் சுய சிந்தனை செய்து எப்பொழுது நாட்டை காப்பாற்றப் போகிறார்கள்.
மக்கள் தொகைப் பெருக்கத்தால்
உணவுப் பற்றாக் குறை!
கல்வியின்மை !
வேலை வாய்ப்பின்மை!
நகர நெரிசல் , இட நெருக்கடி!
போக்குவரத்து பிரச்சினை!
தண்ணீர்ப் பற்றாக்குறை!
எல்லாருக்கும் எல்லாம் கிடைத்து விடாது. வசதி இருப்பவன் எல்லாவற்றையும் அனுபவித்துக் கொள்வான். இல்லாதவன் ? நிச்சயம் கொள்ளை தான் அடிப்பான். ஒரு திருட்டுக் கும்பலை நமக்குத் தெரியாமலே நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.
கூட்டம் கூட்டமாக இருந்தால் தான் நம் பேச்சு சபை ஏறும் என்ற காலம் மலையேறி விட்டது. தரமான மக்கள் இருந்தால் தரணி நம் புகழ் பாடும். இஸ்ரேல் மக்கள் மிகச்சிறந்த உதாரணம்.
இந்த பாழாய்ப் போன அரசு இரவு மின்வெட்டை வேறு அதிகப் படுத்தி விட்டது. மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு இது மிகப் பெரிய காரணம். எது எப்படி இருந்திருந்தாலும் மக்கள் கொஞ்சம் சிந்தித்து இருந்தாலும் எப்பொழுதோ நம்
கட்டுப்பாட்டினுள் இந்த மக்கள் தொகைப் பெருக்கத்தை கொண்டு வந்திருக்கலாம்.
கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். நம் நாட்டில் மட்டும் மக்கள் தொகை குறைவாக இருந்திருந்தால் எல்லோருக்கும் கல்வி,வேலைவாய்ப்பு என்று
அற்புதமான நாடாக இருந்திருப்போம். இன்னும் வளர்ந்திருப்போம்.
வருங்கால வாரிசுகள் வளமாக வாழ சிந்தியுங்கள் மக்களே!
Nalla aru karuthu.......
ReplyDeleteErpargela unggel makkal?
how are you?
Delete