கணினியில் அதிக நேரம் செலவிடுவதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதிக நேரம் இமைக்காமல் பார்ப்பதால் கண்ணில் இயற்கையாக சுரக்கும் திரவம் வற்றிப் போய் கண் எரிச்சல் அதிகமாகிறது. எவ்வளவு நேரம் தூங்கினாலும் இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வைத்து சோம்பேறியாக்குவது இந்த வகையான குறைபாடுகளில்னால்தான்.
ஒரே இடத்தில் அதிகப்படியான நேரம் அசையாமல் அமர்வதினால் ( நாம் தான் வேலை என்று வந்து விட்டால் புலி ஆயிற்றே) கால்களுக்கு சரியான ரத்த ஓட்டம் பாய்வதில்லை. இதனால் சிறு வயதிலேயே கால் வீங்கி பெரிய அளவில் பாதிப்பு வருகிறதாம். இதற்கு என்று தனியாக வியாதி பேர் சொல்கிறார்கள்.
இருக்கையில் நாம் அமரும் விதத்தால் முதுகு வலி வருகிறது. எப்படியும் அதிக நேரம் ஒரே மாதிரியாக நம்மால் உட்கார்ந்து வேலை செய்ய முடியாது.
மாற்றி அமரும் காரணத்தினால் முதுகு தண்டு பலமாக பாதிக்கப் படுகிறது.
எப்பொழுதுமே கீ போர்டை தட்டிக் கொண்டே இருப்பதால் விரல்களும் வெகு சீக்கிரமே சோர்வடைந்து விடுகின்றன. இப்படி இருந்தால் வீட்டில் எப்படி வெங்காயம் தோலுரிப்பது?
ஒரு நாளிற்கு சராசரியாக நாலு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டுமாம். எனக்கு தெரிந்து கணினியில் வேலை செய்பவர்கள் சாப்பிடும்போது மட்டுமே தண்ணீர் பருகுகிறார்கள். மருத்துவர்கள் அறிவுரைப்படி சாப்பிடுவதற்கு முன்பும், பின்பும் அரைமணி நேரத்திற்கு தண்ணீர் அருந்தக்கூடதாம்.
இன்னும் இங்கே பகிர்ந்து கொள்ள முடியாத வியாதிகள் ஆணிற்கும், பெண்ணிற்கும் வருகிறதாம். இது எல்லாம் மருத்துவர்கள் ஊடகங்களில் நாள்தோறும் அறிவுறுத்திக் கொண்டே இருக்கும் ஒரு எச்சரிக்கை மணி.
என்ன செய்வது? பில் கேட்ஸ் என்று ஒரு சாமானியன் எல்லாரையும் கணினி பயன்படுத்த வைத்து விட்டாரே. இப்பொழுது நாமாக நினைத்தாலும் விலக முடியாத ஒன்று இந்த கணினியின் இறுகுப் பிடியும்தான்.
சரி இதற்கான தீர்வுகளில் சிலவற்றைப் பார்ப்போம்.
1. தொடர்ந்து கணினியையே வெறித்துக் கொண்டு பார்க்காமல் சில வினாடிகளுக்கொருமுறை கண்களை இமைத்துக் கொள்வோம். நமக்காக இல்லவிடினினும் நம் கண்ணான கண்மணி பாபபாவிற்காக.
2 .அரைமணிக்கொருதரம் இருக்கையை விட்டு எழுந்து சிறிது காலாற நடந்து வரலாம்.(எல்லாம் நம் மேலதிகாரி அல்லது முதலாளிக்குத் தெரியாமல் தான்)
3 . 4 லிட்டர் தண்ணீர் குடிக்க முயற்சிப்போம். அதனால் அடிக்கடி கழிவறை சென்று வரலாம்.
4 . நல்ல இருக்கை வாங்கி தரச்சொல்லி நம் மேலதிகாரியிடம் முறையிடலாம். அவர் வேலையை விட்டு நம்மை தூக்கி விடாதபடி பக்குவமாக சொல்ல முயற்சிப்போம்.
5 முடிந்த அளவு நம் தகுதியை உயர்த்திக் கொண்டு நமக்கு ஒரு இளம் உதவியாளரிடம் எல்லா வேலைகளையும் தள்ளி விடும் அளவிற்கு நம் தகுதியை வளர்த்திக் கொள்வோம். இதனால் நம் வேலைப் பளு குறையும் என்று நாம் நம்புவோமாக.
இந்த கட்டுரை எல்லா முதாலாளி மற்றும், தொழிலாளிகளின் உடல் நலனை கருத்தில் கொண்டு எழுதப் படுவது. இதில் எந்த உள்நோக்கமும் இல்லை.
எனவே யாரும் யாரையும் எதற்காகவும் வஞ்சம் தீர்க்க வேண்டாம்.
பேஸ் புக்கில் பேச்சைக் குறைங்கப்பா!
super pa
ReplyDelete