Sunday, 7 July 2013

கேரளா கடவுளின் சொந்த நாடு

கடந்த வாரம் 4ம் தேதி கேரளா பயணம் சென்றிருந்தேன். குறுகிய சாலைகள், பழுது பார்க்கப்படாத சில சாலைகளில் பயண நேரம் அதிகமாக இருந்தது. முன்தினம் பெய்திருந்த மழையில் எல்லா ஆறுகளும் நிரம்பி வழிந்தது பார்க்கப் பொறாமையாக இருந்தது. இந்த ஆறுகளையெல்லாம் தமிழ்நாட்டிற்கு திருப்பி விட்டால் எவ்வளவு வளமையாக இருப்பார்கள் நம் தமிழக விவசாயிகள் என்று மனது ஒரு கணக்கில் குதூகலித்தது.

குருவாயூர் கோவிலில் 3 மணிநேரம் நீண்ட வரிசையில் சுமார் 5000பொது மக்களுடன் காத்திருந்தேன். ஒருத்தர்கூட சலிப்புக் காட்டாமல் மௌனமாக ஆண்டவனை பிரார்த்தித்தபடி காத்திருந்த அந்த பண்பு என்னை வியக்க வைத்தது. ஆண்கள் கட்டாயமாக சட்டையை கழட்டி வெற்றுடம்புடன் இருந்தனர். கோயில் வளாகத்தில் ஒரு குப்பையைக் காண முடியவில்லை. கோயில் வாசல் மற்றும் சுற்றுப்புறத்தில் பிச்சைக்காரர் தொந்திரவு இல்லை. வரிசையில் நின்றிருக்கும்போது யாரும் செல்போன் பேசவில்லை. கோவில் நடைபாதையில் இருந்த கடை வியாபாரிகள் யாரும் கூவி விற்கவில்லை. உள்ளே அழைக்கவில்லை. வியாபார தொந்திரவு செய்யவில்லை.

வழியில் ஒரு ஹோட்டலில் மதிய உணவு அருந்தினோம். கொட்டை அரிசி என்றாலும் வெரைட்டி அதிகமாக இருந்தது. நல்ல உணவு 60ரூபாய்தான் வாங்கினார்கள். இதுவே கோவையில் இருந்திருந்தால் 100 ரூபாய் வாங்கியிருப்பார்கள்.  என்னை வியக்க வைத்தது இந்த கேரளாப் பயணம்.

கோழிக்கோடு வரை சென்றதில் நான் கண்டது

••••சாலையோரக் குடிசைகள், ஆக்கிரமப்புக்கள் அறவே கிடையாது
•••• பிளக்ஸ் கலாச்சாரம் இல்லவே இல்லை
•••• பிளாஸ்டிக் குப்பைகள் எங்கும் இல்லை நல்ல விழிப்புணர்வு மக்களிடம்
••••வீட்டுக்கு வீடு நெரிசலில்லாமல் போதுமான இடைவெளி இருந்தது
•••• அப்பார்ட்மெண்ட் கொடுமை இங்கு இல்லை
•••• பலாமரம் வீட்டுக்கு வீடு இருந்தது
•••• ஊர் முழுவதும் பச்சைத் துணியினால் போர்த்தியது போல இருந்தது
•••• கோவில்களில் அன்பளிப்பு உபயம் என்று எவர் பெயரும் பொரித்த உபயப் பொருட்கள் காணப்படவில்லை.
நண்பனின் கமெண்ட் காதில் விழுந்தது. ரூல்ஸ் ராமானுஜம் ஊருங்கோவ்

No comments:

Post a Comment